யோக பைரவர்

யோக பைரவர் சி வகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் திருப்பத்தூர் . இங்குள்ள அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயத்தில் அபூர்வத் திருக்கோலத்தில் - யோகநிலையில் அருள்பாலிக்கிறார் பைரவ மூர்த்தி . லட்சுமிதேவி கடும் தவம் இயற்றி , சிவ பெருமானின் ‘ கௌரிதாண்டவ ’ த்தைத் தரிசித்து பேறு பெற்ற மிக அற்புதமான தலம் இது . இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்கவந்த காசி பைரவரே , இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம் . ஆக , இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள் . நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் திரு...